சீன அரசுக்கு எதிராக பரவும் பதிவுகள்.! தீவிர கண்காணிப்பில் தணிக்கை குழு..! - Seithipunal
Seithipunal


ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு சீனாவின் முக்கிய அரசியல் நிகழ்வாகும். இந்தக் கூட்டம் நாளை தொடங்குகிறது. சீனாவின் இந்த 20ஆவது மாநாட்டில் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுக்க அதிபராக இருக்கும் சட்டத் திருத்தத்தை ஜி ஜின்பிங் கொண்டு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதால், ஜி ஜின்பிங்கிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி  நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் சாலை மேம்பாலத்தில் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பேனர்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த பேனரில் மாண்டரின் மொழியில், ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்றும், அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு சீர்திருத்தம் தேவை, கலாச்சார புரட்சி அல்ல. நாம் கொரோனா பரிசோதனை செய்யாமல் சாப்பிட வேண்டும் என்பதே முக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பேனர்களை வைத்தவர்களை சீன போலீசார் தேடி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

சீனாவில் போராட்டம் என்பது அரிதான ஒன்று. அதிலும் இதுபோன்ற உயர்மட்ட கூட்டம் நடைபெறும் போது, பீஜிங்கில் அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட போராட்ட பேனர்கள் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், உடனே அவையனைத்தும் அகற்றப்பட்டன. பீஜிங்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்கு, தன்னார்வலர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சீன அதிபர் மற்றும் அரசின் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக ஊடக பதிவுகள், முக்கிய வார்த்தைகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை சீன அரசின் சமூக ஊடக தணிக்கையாளர்கள் தடுத்துள்ளனர்.

அதேபோல், சீனாவில் டுவிட்டருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் வெய்போ வலை தளத்தில் அரசுக்கு எதிராக பதிவிட்டுள்ள அனைத்து பதிவுகளும்  நீக்கப்பட்டுள்ளன. மேலும் சில ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த முடியாத வகையில் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் வேறு சில ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி சீன அரசுக்கு எதிர்ப்பு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றை சீன அரசின் சமூக ஊடக தணிக்கையாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சீனாவில் அரசியல் எதிர்ப்புகள் மிகவும் அரிதான ஒன்று என்பதால், இந்த பேனர் எதிர்ப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social medias post against china govt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->