செனகல் : நாடாளுமன்றத்தில் கர்ப்பிணி எம்பியை வயிற்றில் உதைத்த எதிர்க்கட்சி எம்பிகளுக்கு 6 மாதம் சிறை.! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த பட்ஜெட் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் கை கலப்பாக மாறியது. 

அதில், ஆளும்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யான ஆமி என்டியாயோ கினிபியை, எதிர்க்கட்சியை சேர்ந்த மசாதா சாம்ப் என்ற எம்.பி. கன்னத்தில் திடீரென  அறைந்தார். இதனால் கோபமடைந்த கினிபி, மசாதா மீது நற்காலியை தூக்கி எறிந்தார். 

அதற்கு மசாதாவும், எதிர்க்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி.யுமான மாமடோவ் நியாங் என்பவரும் கினிபியின் வயிற்றில் எட்டி உதைத்தனர். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சம்பவம் நடந்த நேரத்தில் கினிபி கர்ப்பமாக இருந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, தன்னை சரமாரியாக தாக்கிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது கினிபி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் தலைநகர் தக்கார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. 

இந்நிலையில், இந்த வழக்குக்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றபோது, மசாதா மற்றும் நியாங் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக  நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவர்களை குற்றவாளியாக அறிவித்தது. 

இதற்கு கினிபி சார்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிகள் இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிபதிகளை வலியுறுத்தினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள் இருவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six month jailed to two mps in senegal for assulting pregnent lady


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->