சிங்கப்பூரில் ரீ என்ட்ரி கொடுக்கும் கொரோனா: மருத்துவமனையில் அலைமோதும் மக்கள்! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

பல நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 32,035 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தத் தொற்று எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது பத்தாயிரம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapore covid 19 cases rise


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->