ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஹங்கேரி வழியாக கொண்டு செல்ல செர்பியா ஒப்பந்தம் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் வணிக தடைகளை விதித்தன. இதனால் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் முற்றிலுமாக தடைப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து ஹங்கேரி நாட்டின் வழியாக செர்பியாவிற்கு குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.

செர்பியாவிற்கு வழக்கமாக குரேஷியா வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்ட வந்த நிலையில், குரேஷியா ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வந்ததால் அந்நாட்டின் வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செர்பியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக ஹங்கேரி தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதற்கு ஐரோப்பிய யூனியனுக்கு ஹங்கேரி ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Serbia and Hungary agreement for transport of Russian crude oil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->