ஆயுத பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கிறதா ரஷ்யா? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரி வெளியிட்ட தகவல்!

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் நிலவி வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போய் உள்ளன. உக்ரைனுக்கு சொந்தமான நான்கு பிராந்தியங்களை தங்களுடன் இணைத்துக் கொண்டது ரஷ்யா. இதன் பின்னரும் உக்ரைன் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்திடம் சண்டையிட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களையும் போர் தளவளங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொடுத்து உதவி வருகின்றன. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் தங்களது கையிருப்பில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு எதிர் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. 

சில நாட்களுக்கு முன்பு கிரீமியா-ரஷ்யா உடன் இணைக்கும் தரைப்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது இதற்கு காரணம் உக்ரைன் தான் என ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா அதிகப்படியான வான்வழி தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இதனால் ரஷ்யாவிடம் கையிருப்பில் உள்ள ஆயுதங்கள் குறைந்து பற்றாக்குறை நிலவி வருவதாக மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து உழவு அமைப்பாளர் ஜி.சி.ஹெச்.க்யூ அமைப்பின் தலைவர் ஜெரேமி ப்ளெமிங் "ரஷ்யாவிடம் ஆயுதங்கள் தீர்ந்து விட்டன என்று போர் களத்தில் உள்ள ரஷ்ய படைத்தளபதிக்கு தெரியும் எங்களுக்கும் தெரியும்" என்று கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து ரஷ்ய தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. நேற்று கஜகஸ்தானில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவின் நட்பு நாடுகள். உக்ரைன் போர் சம்பந்தமாக அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை ரஷ்யா செவி சாய்க்கும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian army stuck with a lack of weapons


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->