உக்ரைனுக்கு பீரங்கிகள் வழங்கினால் வருத்தப்பட வேண்டியதிருக்கும் - ரஷ்யா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் பதினோரு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா தனது இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இப்போரின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் மற்றும் ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கினால், பின்னர் வருத்தப்பட வேண்டியதிருக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யா அரசின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த பீரங்கிகளை மேற்கத்திய நாடுகள் அனுப்பலாம். ஆனால் உக்ரைன் போரின் நிலைமை மாறிவிடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்பிய பிறகும் போரில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருப்பதை மேற்கத்திய நாடுகள் காணப் போகிறது என்றும், மேற்கத்திய நாடுகளின் இந்த செயல்பாடு உக்ரைன் மக்களுக்கு பாதிப்பையும், பிரச்சனைகளையும் அதிகப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia warns that supplying tanks to Ukraine may regret later


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->