துறைமுகத்தில் ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் போர்க்கப்பலை அழித்த ரஷ்ய படைகள்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவிற்கு, உக்ரைனுக்கும் இடையே கையெழுத்தானது.

ஆனால் கையெழுத்திட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதையடுத்து ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒடேசா துறைமுகத்தில் உக்ரைனின் போர் கப்பல் உள்ளிட்ட ராணுவ பொருட்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அமெரிக்காவால் வழங்கப்பட்ட கப்பல், எதிர்ப்பு ஏவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கு முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் எனவும், ஒப்பந்தத்தில் வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia violated agreements attacks Ukraine warship


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->