ஸபோரிஷியா அணு மின் நிலையம் தொடர்பான தீர்மானம்.! ஐநாவில் ரஷ்யா நிராகரிப்பு - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மறு ஆய்வு கூட்டம் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வந்தது.

மேலும் 191 நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் 1970ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த நிலையில், ஒவ்வொரு தீர்மானமும் 191 நாடுகள் ஒப்புதல் அளித்த பின்னரே நிறைவேற்றப்படும்.

இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமித்துள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் நிகழும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து வரைவு தீர்மானத்தில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா இதற்கு மறுப்பு தெரிவித்து தீர்மானத்தை நிராகரித்துள்ளது.

இதையடுத்து அணு ஆயுதப் பரவல் தடை தொடா்பாக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீா்மானத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று ரஷ்ய ஆயுத பரவல் தடுப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு பிரிவின் இணை இயக்குனர் இகாா் விஷ்னெவெட்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா மட்டுமின்றி, சில நாடுகள் தீர்மானத்தில் உள்ள அம்சங்களை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia rejected resolution on Zaporizhia case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->