24 மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட உக்ரைன் நகரங்களில் ரஷ்யா அதிரடி தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றின.

இப்போரில் முன்னேறி வரும் உக்ரைன் படைகள், ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அந்நகரை சுற்றியுள்ள நகரங்களின் மீது ஒரே நாளில் 75 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 40க்கும் மேற்பட்ட உக்கரை நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதில் கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், மைக்லோயாவின் தெற்கு நகரில் கடுமையான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.  இதனிடையே, உக்கரைன் விமானப்படைகள் 25 ரஷ்ய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia launched an offensive in more than 40 Ukrainian cities in 24 hours


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->