உக்ரைன் மீது 400-க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் - ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் இரண்டாம் கட்ட தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்தியுள்ளதால், உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 400க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, உக்ரைன் மீது இதுவரை 400க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 60-70 சதவீதம் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

மேலும் உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 170க்கும் அதிகமான உக்ரைன் சரக்குக் கப்பல்கள் துருக்கியில் தடுத்து நிறுத்தி, உக்ரைன் சரக்குக் கப்பல்களில் தேவையற்ற ஆய்வுகள் செய்து ரஷ்யா கப்பல்கள் செல்வதை தாமதப்படுத்துகிறது. இந்த கப்பல்களை ரஷ்யா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Attacks Ukraine Using 400 Drones


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->