உக்ரைன் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷ்யா அதிரடி தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், கெசன் நகரை விட்டு ரஷ்ய ராணுவம் வெளியேறியதையடுது, நேரில் பார்வையிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி போரின் முடிவுக்கான ஆரம்பம் என்று தெரிவித்தார். ஆனால் நேற்று ஒரே நாளில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இது மிகப்பெரிய தாக்குதல் என்று உக்ரைன் விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

உக்ரையின் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் தலைநகர் கீவில் 5 மாடிகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு ஏவுகணைகள் உக்கரை அடுத்த போலாந்து எல்லை பகுதியில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

கீவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் 85 ஏவுகணைகளை ரஷ்ய தரப்பிலிருந்து ஏவப்பட்டதாகவும், இது தங்கள் எரிசக்தி உள் கட்டமைப்பை சீர்குலைக்க நடத்தப்பட்ட தாக்குதல் என்று உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia attacked Ukraine by more than 100 missiles


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->