பிரபல பாப் இசை பாடகர் மடோனா மருத்துவமனையில் திடீர் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


பிரபல பாப் இசை பாடகர் மடோனா மருத்துவமனையில் திடீர் அனுமதி.!!

அமெரிக்கா நாட்டில் பிரபல பாப் இசை பாடகியாக உள்ளவர் மடோனா. இவர் உலகம் முழுவதும் பாப் இசை பாடல்களின் ராணி என்ற புகழை பெற்றவர். இவருடைய பாடல்களுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

இந்த நிலையில், பாடகி மடோனா கடந்த சில நாட்களுக்கு முன்பு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்பு அதை மருத்துவர்கள் அகற்றினர். இருப்பினும் அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதற்கிடையே மடோனாவின் குடும்ப உறவினர் ஒருவர், "கடந்த இரண்டு நாட்களாக, மடோனாவின் உடல்நிலை எந்த திசையில் திரும்ப போகிறது என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 

அவரது குடும்பத்தினர் எந்த மோசமான செய்திக்கும் தயாராகி வருகின்றனர்" என்றுத் தெரிவித்தார். பாப் இசை பாடகர் மடோனா கனடா நாட்டின் வேன்கூவர் நகரில், "செலிப்ரேஷன் டூர்" என்ற பெயரில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தீவிர தொற்று நோய் காரணமாக அப்பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pop music singer madona addimited in hospital


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->