#BigBreaking:: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பிணையை நீட்டிக்க கோரி இம்ரான் கான் ஆஜரான நிலையில் அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர் இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைது நடவடிக்கையின் போது இம்ரான் கானின் வழக்கறிஞரும் கடுமையாக தாக்கப்பட்டார். நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட இம்ரான் கான் தான் கைது செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தேர்தல் பரப்புரையை தடுக்க கைது நடவடிக்கை மேற்கொள்ள அரசு மற்றும் ராணுவம் திட்டமிட்டு இருப்பதாகவும் இம்ரான் கான் குற்றம்சாட்டி இருந்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், எதையும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.

இதனிடையே அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த, பதற்றத்தை தணிக்க இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட இம்ரான் கானை உடனடியாக நீதிமன்றத்தில் ஆசை படுத்த வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இம்ரான் கான் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசரமாக ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைது குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதமானது என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan supreme court ordered to release Imran Khan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->