லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமரின் மகன்.! 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்.! - Seithipunal
Seithipunal


லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ் 4 ஆண்டுகள் பிறகு நேற்று அதிகாலை நாடு திரும்பினார்.

கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் இருந்தபோது, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பிரதமரின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ் அப்போது நாட்டை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார். 

இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பிரதமர் பதவி விலக ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சுலைமான் ஷெஹ்பாசை ஊழல் வழக்கில் கைது செய்வதற்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. 

மேலும் இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற 13-ந் தேதிக்குள் அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் லண்டனுக்கு தப்பியோடிய பிரதமரின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அதிகாலை நாடு திரும்பினார். 

இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுலைமான் ஷெஹ்பாஸ், தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், எனது பாதுகாப்பிற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுலேமான் ஷெஹ்பாஸை அவரது தந்தை சந்தித்து இருவரும் கட்டிப்பிடிப்பதையும், ஷேபாஸ் ஷெரீப் சுலைமானுக்கு மாலை அணிவித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan PM son who fled to London returned to the country after 4 years


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->