பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 63ஆக உயர்வு - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் வடமேற்கு நகரமான பெஷாவரில் மசூதிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் பெஷாவர் காவல் தலைமையகத்திற்கு அருகே உள்ள மசூதியில் வழக்கம் போல் நேற்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது மதியம் 1.40 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் மசூதியின் மேற்கூரை மற்றும் சுவர் கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இந்த பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan mosque blast death toll rises to 63


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->