இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்..! தீவிர வேட்டையில் இந்திய பாதுகாப்பு படையினர்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை யினர் சுட்டு வீழ்த்தினர். 

இன்று அதிகாலை 4.35 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் செக்டரில் அமைந்துள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக ஆளில்லா விமானம் ஒன்று நுழைந்தது. 

இதனை பார்த்த வீரர்கள் அதை நோக்கி குண்டுகளால் பதினேழு ரவுண்டுகள் சுட்டனர். அப்போது, அந்த டிரோனின் இறக்கை ஒன்று சேதமடைந்து கீழே விழுந்தது.

இதனால், அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதலுக்குப் பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, கடந்த ஒன்பது மாதங்களில், பாகிஸ்தானில் இருந்து 191 ஆளில்லா விமானங்கள் சட்டவிரோதமாக  இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதாக  பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்டவை இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால், இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதிகளில் ஆங்காங்கே கேம்ப் அமைத்து இருக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் உள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan Drone entered Indian territory


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->