வடகொரியா குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை - தென்கொரியா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


வடகொரியா ஐ.நா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும், தென்கொரியாகவும் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தீவிர ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் மேற்கு கடற்கரை ராம்போ பகுதியிலிருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வடகொரியாவின் ஏதேனும் ஒரு ஏவுகணையை சுட்டு வீழ்த்தினால் கூட அது வடகொரியா மீது போர் தொடுத்ததற்கு ஒப்பாகும் என கடந்த வாரம் வடகொரியா அதிபா் கிம் ஜோங் சகோதரி யோ ஜோங் எச்சரித்ததை தொடர்ந்து, இந்த பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீசப்பட்ட ஏவுகணை எங்கு விழுந்தது மற்றும் எவ்வளவு தூரம் சென்றது என தென்கொரியா ராணுவம் எந்த வித தகவலும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் தென்கொரியா, அமெரிக்கா இடையேயான ஃப்ரீடம் ஷீல்ட் ராணுவ பயிற்சி தொடங்க உள்ள நிலையில், வடகொரியா பாலிசிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது கொரியா தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea test short range ballistic missiles again


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->