வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.! எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து,  வடகொரியா தனது எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. மேலும் கடந்த சில வாரங்களாக ஜப்பான் மற்றும் தென் கொரியா எல்லைப் பகுதிகளில் வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

கடந்த 2 வாரத்தில் மட்டும் 8 முறை ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியா மற்றும் அமெரிக்கா போர் விமானங்கள் எல்லையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியா இன்று மீண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை நடத்தியதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கொரியா எல்லை பகுதி அருகே வடகொரியா விமானங்கள் பறந்து சென்றதாக தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea repeats missile test as war escalates over border


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->