கொலம்பியாவில் ராணுவ தளம் மீது தாக்குதல் - 9 வீரர்கள் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கொலம்பியாவில் ராணுவ தளத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் என்ற கிளர்ச்சியாளர்கள் குழு அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு கொலம்பியாவில் உள்ள கேடடம்போ பிராந்தியத்தின் எல் கார்மென் நகராட்சியில் உள்ள ராணுவ தளத்தின் மீது கொரில்லா கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, ராணுவ வீரர்கள் மீதான கொரில்லா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அமைதி மற்றும் மக்களிடமிருந்து கொரில்லா கிளர்ச்சியாளர்கள் குழு முற்றிலும் அந்நியப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொலம்பியா அரசு, நாட்டில் வன்முறையை கட்டுப்படுத்த கொரில்லா குழுவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nine soldiers killed in attack on army base in Colombia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->