தொட்டாலே விஷம் : சயனைடை விட 6000 மடங்கு கொடிய நச்சுத் தாவரம்!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள கொல்வின் விரிகுடாவில் உள்ள குயின்ஸ் கார்டன்ஸ் பூங்காவில் சயனைடை விட ஆறாயிரம் மடங்கு அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம் வளர்க்கப்படுவது கண்டரியபட்டது. 

இந்த தாவரத்தை பெண்மணி ஒருவர் பார்த்து தனது செல்போனில் படம் பிடித்து, அதனை தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த தாவரம் 'ரிசினஸ் கம்யூனிஸ்' என்று அழைக்கப்படும். இது ஆமணக்கு வகையை  சேர்ந்தது. இதன் காரணமாக இந்த தாவரம் உலகின் மிகவும் கொடிய  நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் பெயரிடப்பட்டது.

இந்த தாவரங்களை கையுறைகளால் மட்டுமே கையாள வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த தாவரத்தின் விதைகளின் நுகர்வு மிகவும் ஆபத்தானது என்று அவர் தெரிவித்தார். அதன் பின்பு, அவர் பூங்கா நிர்வாகத்தை தொடர்புகொண்டு அந்த தாவரத்தை அகற்றுமாறும், எச்சரிக்கைப் பலகைகளை நிறுவுமாறு பரிந்துரைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near england 'Ricinus communis' plant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->