பணம் கட்டினால் பகுதி நேர வேலைவாய்ப்பு.! மோசடியில் சீனக் கும்பல்..! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து பொது மக்களிடம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஒரு கும்பல் கீப்ஷேரர் செயலி என்ற ஒன்றை உருவாக்கி அதில், பணம் கட்டினால் பகுதி நேர வேலைவாய்ப்பு என்று விளம்பரம் செய்து பணம் கட்டியவர்களை வேலையில் சேர்த்து மோசடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பெங்களூருவில் 12 இடங்களில் நிறுவனம் தொடங்கிய அந்த கும்பல் திடீரென பிளேஸ்டோரில் இருந்து செயலி நீக்கியது. இதனால், அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விளம்பரத்தை கண்டு ஏமாந்தவர்கள் அமலாக்கத்துறையில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தது சீன கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore china people cheating in indian people


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->