மூன்றாவது முறையாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு.! வரும் 27ஆம் தேதி விண்ணில் செலுத்த நாசா இலக்கு - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் விண்வெளி அமைப்பு நாசா மனிதர்களை 2025-க்குள் நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்காக ஆர்டெமிஸ்-1 வின்கலத்தை மனிதர்கள் இல்லாமல் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.

மேலும் கடந்த ஆகஸ்டு 29 மற்றும் செப்டம்பர் 3ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், நிலைத்தன்மை மற்றும் எரிபொருள் கசிவு உள்ளிட்ட தொழில் நுட்ப காரணங்களால் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஆர்டெமிஸ்-1 விண்கலம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் சோதனை நடைபெற்று வருவதால், ராக்கெட் ஏவப்பட வாய்ப்பு இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 27ஆம் தேதி விண்ணில் செலுத்துவதற்கு இலக்காக கொண்டுள்ளோம் எனவும், 70 நிமிடங்களுக்குள் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நாசா கட்டுப்பாடு விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA Artemis 1 postponed for 3rd time as 27 declared launch date


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->