ஹவாயின் கிழக்கே பறந்த மர்ம பலூனால் மீண்டும் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மவுண்டானா மாகாணத்தின் கஸ்ஹடி நகரில் அமைந்துள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் கடந்த 1ந்தேதி வெள்ளை நிறத்தில் மர்ம பலூன் ஒன்று பறந்தது. இது சீன உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம் சாட்டிய, அதிபர் உத்தரவையடுத்து பலூன் அட்லாண்டிக் கடல்பரப்பில் பறந்தபோது அமெரிக்க போர் விமானங்கள் மூலம் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹவாய் தீவின் ஹொனலுலுவின் கிழக்கே சுமார் 500 மைல் தொலைவில் ஒரு பெரிய வெள்ளை பலூன் பொறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பலூனின் உயரம் 40,000 முதல் 50,000 அடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அல்லது பிற அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் இந்த பலூன் விவகாரம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious white balloon flew east of Hawaii


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->