அதிகாலை குலுங்கிய மியான்மர்: 4.6 ரிக்டர் பதிவு!
Myanmar earthquake
மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.