ஆப்கானிஸ்தான் : வறுமையினால் இரண்டு வயது குழந்தையை விற்க முடிவு செய்த தாய்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பால்க் மாகாணத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் வறுமையினால், தங்கள் குழந்தையை விற்க முயன்றதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்த மாகாணத்தில் உள்ள சில உள்ளூர்வாசிகள் அந்தக்குடும்பத்திற்கு உணவு மற்றும் பிற உதவிகளை செய்து வந்தனர். இதனால், அந்த இரண்டு வயது குழந்தை விற்கப்படாமல் காப்பாற்றப்பட்டது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாய் தெரிவித்ததாவது, 

"நான் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறேன்; என்னிடம் சாப்பிடுவதற்கோ அல்லது எரிபொருளைப் பயன்படுத்துவதற்கோ எதுவும் இல்லை; இந்த குளிர்காலத்தில் வீட்டிற்கு தேவையான ஒரு அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கிறேன். மிக மோசமான வறுமையின் காரணமாக தனது குழந்தையை விற்பதற்கு முயற்சி செய்தேன்.

இதேபோல், எங்கள் மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்களும் வறுமையில் தத்தளிக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக வறுமையில் தவிக்கும் எங்களுக்கு உள்ளூர் அரசாங்கமோ அல்லது மனிதாபிமான அமைப்புகளோ எந்த உதவியும் செய்யவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை என்றும், அங்கு கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother sales two years child for poverty in afganisthan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->