ஊழியரை பதம் பார்த்த தானியியங்கி ரோபோ.! தென்கொரியாவில் சோகம்.! - Seithipunal
Seithipunal


தென்கொரியா நாட்டில் உள்ள கியாங்சாங் மாகாணத்தில் இயங்கி வரும் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி மையத்தில் இருந்து விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், இந்த நிறுவனத்தில் மனிதர்களுடன் சேர்ந்து தானியங்கி ரோபோக்களும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் நேற்று முன் தினம் குடை மிளகாய் அடைக்கப்பட்ட பெட்டிகளை, ரோபோ ஒன்று ட்ரேயில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது. அவற்றை நாற்பது வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் கண்காணித்து வந்தபோது ரோபோவில் திடீரென கோளாறு ஏற்பட்டு, பெட்டிக்கு பதிலாக அருகே நின்று கொண்டிருந்த ஊழியரை தூக்கி போட்டது. 

இதில், அந்த ஊழியரின் தலை நசுக்கப்பட்டு அவர் படுகாயமடைந்தார். இதனை பார்த்த சக ஊழியர்கள், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போல் கடந்த மார்ச் மாதம் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரை தானியங்கி ரோபோட் ஒன்று தூக்கி வீசபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for robot attack in south korea


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->