இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மீண்டும் அயர்லாந்தின் பிரதமராக தேர்வு.! - Seithipunal
Seithipunal


அயர்லாந்தின் பிரதமராக லியோ வரத்கர் 2020-ல் செய்யப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அவர், எங்கள் குடிமக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கை மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்குவதற்காக, பணிவுடன், உறுதியுடன் மற்றும் விருப்பத்துடன் இந்த நியமனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் கடந்த 2017 முதல் 2020 வரை அயர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். இதனால் லியோ வரத்கர் 38 வயதில் அயர்லாந்தின் இளம் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன் கேல் கட்சி பியனா பெயில் மற்றும் பசுமை கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. 

இதில் லியோ வரத்கர் துணைப் பிரதமராகவும், தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரியாகவும் பணியாற்றினார். முன்னதாக 2020-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 2022 டிசம்பர் வரை பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் பிரதமராகவும், அதன் பிறகு லியோ வரத்கர் பிரதமராக இருப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி லியோ வரத்கரை புதிய பிரதமராக தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டதில் 87 உறுப்பினர்கள் லியோ வரத்கருக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், மீண்டும் அயர்லாந்து பிரதமராக லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo Varadkar of Indian origin re elected as Prime Minister of Ireland


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->