இங்கிலாந்து : இந்திய தூதரகத்தில் தேசிய கொடி மீது தாக்குதல்.! அரசு நடவடிக்கை எடுக்குமா? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியும், ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்தும் உள்ளனர். அதன் பின்னர், இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர். 

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக மத்திய அரசு புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து நாட்டு அரசின் அலட்சிய போக்கை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. 

இங்கிலாந்தில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

khalistan supporters attack indian flag in england


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->