ஆபாசமாக படம் எடுக்கவும், வைத்திருக்கவும் தடை - எந்த நாட்டில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆபாசமாக படம் எடுக்கவும், வைத்திருக்கவும் தடை - எந்த நாட்டில் தெரியுமா?

ஜப்பானில் கடந்த சில வருடங்களாக மறைந்திருந்து நிர்வாண மற்றும் அரை நிர்வாணங்களை படமெடுப்பதும், அவற்றை ரசிப்பதும் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஜப்பான் நாட்டின் சிறப்புமிக்க, மருத்துவ குணம் வாய்ந்த வெந்நீர் ஊற்றுகளில் நீராடும் பெண்களை ரகசியமாக படமெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களைத் தடுப்பதற்காக மொபைல் போன் நிறுவனங்கள், ரகசியமாக புகைப்படம் எடுக்கும்போது ஒலி எழுப்பும் அளவை அதிகரித்தது. இருப்பினும் இந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 

ஆகவே நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகளை ஜப்பான் அரசு மீள் வரையறை செய்து, புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி ஒருவரின் அனுமதியில்லாமல் நிர்வாணம் மற்றும் அரை நிர்வாண நிலையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றமாகிறது. 

அதுமட்டுமல்லாமல், படம் எடுப்பதும் அது சார்ந்த பதிவுகளை வைத்திருப்பதும், அதனை பகிர்வதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையுடன், ஜப்பான் கரன்சியில் 3 மில்லியன் யென் அபராதமும் விதிக்கப்படும்.

ஜப்பான் அரசு பாலியல் சார்ந்த பல்வேறு அத்துமீறல்கள், சுரண்டல்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 13 என்பதிலிருந்து 16 என்பதாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jappan ban taking obscene photos and vedios on mobile


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->