உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதி உதவி - ஜப்பான் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதலால் உக்ரைனில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் மற்றும் மின் நிலையங்கள் பல கட்டமைப்புகள் சின்னபின்னமாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, உக்ரைனின் சீரமைப்பிற்கு பல்வேறு உலக நாடுகள் பொருளாதார வகையில் உதவி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி (இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 45,487 கோடி) வழங்க உள்ளதாக ஜப்பான் பிரதமர்  புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். இது தொடர்பாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜப்பான் பிரதமர், ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நகரங்களின் கட்டமைப்புகளை சீரமைப்பதற்கும் உக்ரைன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு உதவி தேவை. எனவே உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் போர் ஓராண்டு நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 கூட்டமைப்பின் மாநட்டை நடத்த முடிவு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan announces 5 point 5 billion dollar financial aid to Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->