இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: 6.0 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது, 

இந்தோனேசியா, வடக்கு மலுகு மாகாணத்தில் டோபேலோவிற்கு மேற்கு பகுதியில் சுமார் 94 கிலோ மீட்டர் தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் வானிலை தட்பவெட்பவியல் மற்றும் புவியியல் இயற்பியல் நிறுவனம் சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

கடந்த ஆண்டு மேற்கு ஜாவா பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 331 பேர் உயிரிழந்தனர். 600 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia Earthquake 60 Richter


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->