சூடானில் மோதல் நீடிப்பு.! "இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - இந்திய தூதரகம் 2ம் முறை எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் காரணமாக இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் 2வாது முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆர்.எஸ்.எப் எனப்படும் தனிப்பட்ட துணை ராணுவ விரைவுபடையை ராணுவத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவம், ராணுவ படைகளுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியர் ஒருவர், ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, சூடானில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுக்கும் நிலையில், இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என 2வது முறையாக இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் வீட்டின் பால்கனி மற்றும் மொட்டை மாடி போன்றவற்றில் நிற்பதை தவிர்க்குமாறும், எப்போது சாத்தியம் ஏற்படுகிறதோ, விரைவாக நகரும் வகையில் பாஸ்போர்ட் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும், இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய மருந்துகள், உணவு, குடிநீர் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indians should not come out of the house sudan Indian embassy warns for the second time


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->