நியூயார்க் வங்கியில் துணைத்தலைவராக பொறுப்பேற்கும் இந்திய பெண்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மொத்தம் பன்னிரண்டு மத்திய ரிசர்வ் வங்கிகள் உள்ளன. அதில், மிகவும் முக்கியமானதாக கருதப்படும் வங்கி என்றால் அது நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கி ஆகும்.

இந்த வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த 54 வயதான சுஷ்மிதா சுக்லா என்கிற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு தலைமை செயல்பாட்டு அதிகாரி என்ற கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்கவர் ஆவார். அதனால், இவருடைய நியமனத்தை நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் குழு அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அவர் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சுஷ்மிதா சுக்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கி போன்ற பணி சார்ந்த அமைப்பில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 

என்னுடைய அனுபவங்கள் மற்றும் பாடங்களைக் கொண்டு வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்தையும் தலைமைப் பண்புடன் செயல்படுவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian woman sushmitha sukla appointed vice president in newyark reserve bank


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->