ரசாயன பயன்பாட்டை குறைக்க இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் - இந்தியா வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (பிம்ஸ்டெக்) இரண்டாவது வேளாண்மை அமைச்சர்கள் கூட்டம் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில், நேற்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்றனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மந்திரி தோமர் பேசியதாவது, வேளாண்மை துறை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவான பிராந்திய செயல் திட்டத்தை ஏற்படுத்த பிம்ஸ்டெக் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மேலும் சிறுதானியங்கள் தயாரிப்புகளை ஊக்குவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், உறுப்பு நாடுகள் அனைவரும் உகந்த வேளாண்முறையை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், இரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கவும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் 1997இல் நிறுவப்பட்டது. இதில் தெற்காசியாவின் ஐந்து நாடுகள் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இரண்டு நாடுகள் மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் அடங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India urges to bimstec countries t encourage organic farming and reduce chemical use


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->