காஷ்மீர் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும்.! ஐ.நா கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்.! - Seithipunal
Seithipunal


சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி காஷ்மீர் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அதில் 2019ஆம் ஆண்டு காஷ்மீர் மீது விதிக்கப்பட்ட சிறப்பு சட்டத்தை திரும்ப பெறுதல், சுதந்திரமான பார்வையாளர்கள் அனுமதி உள்ளிட்ட 6 பரிந்துரைகளை பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு சமர்ப்பித்தது.

இதையடுத்து பாகிஸ்தானின் பரிந்துரைகளுக்கு இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதிலளித்தார். இதில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் எப்பொழுதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். காஷ்மீரை மேம்படுத்த தேவையான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மீது ஏற்படுத்தப்பட்ட சட்ட மாற்றங்களுக்கு பிறகு அனைத்து பகுதி மக்களை போலவே ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் திறமையையும், முழு திறனையும் வெளிப்படுத்த முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது என்றும், எப்போதும் இல்லாத அளவிற்கு 16 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India reply to Pakistan as Kashmir will always be a part of India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->