அதிவேகத்தில் வந்த இரயில்.. 200 மீ இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்ட பேருந்து.. மரண ஓலத்தில் உயிரிழந்த மக்கள்..!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சி நகரில் இருந்து அங்குள்ள சர்கோதா நகரினை நோக்கி பேருந்து பயணம் செய்து கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், பேருந்து அங்குள்ள சிந்து மாகாணத்திற்கு அருகேயுள்ள சுக்கூர் மாவட்டத்தில் வந்து கொண்டு இருந்துள்ளது.

இப்பகுதியில் அமைத்துள்ள ஆளில்லா இரயில்வே கேட்டை பேருந்து கடக்க முயற்சி செய்த நிலையில், இரயில்வே தண்டவாளத்தில் இரவுல்பெண்டி பகுதியில் இருந்து கராச்சி செல்லும் பாகிஸ்தான் அதிவிரைவு இரயில் வந்து கொண்டு இருந்துள்ளது. 

இந்த இரயில் பேருந்தின் மீது மின்னல் வேகத்தில் மோதியதை அடுத்து, பேருந்து தண்டவாளப்பகுதியிலேயே சுமார் 200 மீ அளவுக்கு இழுத்து செல்லப்பட்டு வீசப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் பரிதாபமாக பலியாகினர். 20 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ள நிலையில், மருத்துவமனையில் உள்ளவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Pakistan bus train accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->