களைகட்டும் இமாச்சலம்.. 62 வேட்பாளர்களை அறிவித்த பாஜக.. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளுமா?  - Seithipunal
Seithipunal


இமாச்சலபிரதேசத்தில் 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு வருகிற நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற நோக்கில் காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. 

இந்நிலையில், தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக மற்றும் காங்கிரஸ் காட்சிகள் இன்று வெளியிட்டுள்ளன. அதன்படி, முதல்கட்டமாக பாஜக 62 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதேபோன்று, காங்கிரஸ் 46 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் அறிவித்துள்ள வேட்பாளர்களில் 19 பேர் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachal pradesh election 62 participates alounce bjp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->