குட்டி போடும் பாறைகள்... விஞ்ஞானிகள் கூறும் அற்புதம்... ஆச்சரியத் தகவல்.! - Seithipunal
Seithipunal


பாறைகள் வாழ்கின்றன குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்கின்றன ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன என்றால் நம்மால் நம்ப முடிகிறதா.? நிச்சயமாக நம்ப முடியாது ஆனால் இதுதான் உண்மை.தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருக்கும் ஒருவகை பாறைகள் வாழும் பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பாறைகளுக்கு ட்ரோவாண்டஸ் பாறைகள் என்று பெயர்.

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான  ருமேனியாவில் உள்ள சிறிய நகரம் கோஸ்டெஸ்டி. இந்த நகரத்தில் தான் ட்ரோவாண்டஸ் கற்கள் இருக்கின்றன. பொதுவாக கற்கள் என்றாலே உயிரற்ற பொருட்கள் ஆனால் இந்தப் பாறைகள்  தாமாகவே புதிய பாறைகளை குழந்தைகளை போல பெற்றெடுக்கின்றன. மேலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகருகின்றன. இது எல்லாம் நடக்கிறது என விஞ்ஞானிகளும் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கற்கள் டைனோசர் முட்டைகள் என்றும் புதை வடிவங்கள் என்றும் அதிசய கற்கள் என்றும் மக்கள் அழைக்கின்றனர். ஆனால் இவை சுண்ணாம்பு மணல் கற்கள் மற்றும் பலவகை கனிமங்களை கொண்ட பாறைகள் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தப் பாறைகள் பொதுவாக கூழாங்கற்கள் எலும்புகள் மற்றும் புதை படிவங்களை சுற்றி சேகரிக்கப்பட்ட தாதுக்களிலிருந்து உருவாகின்றன என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வித்தியாசமான கற்கள் மனித இனம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 53 லட்சம் ஆண்டுகளாக இந்த பாறைகள் பூமியில் இருப்பதாகவும் நிலநடுக்கங்களால் இந்த கற்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. மேலும் இந்த பகுதி பழங்காலத்தில் கடலாக இருந்ததாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு ட்ரோவாண்டஸ் பாறைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு 1.5 முதல் 2 அங்குலங்கள் வரை வளரும் என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி  யுனெஸ்கோவால்  பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Have you heard of rocks delivering baby rocks Scientists say surprising information


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->