சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை.. மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூர் நாட்டில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மருந்து தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். இந்த சட்டத்திற்கு உலக அளவில் எதிர்ப்புகள் இருந்தது.

அதன் காரணமாக சிங்கப்பூர் அரசு அதனை மறுபரிசீலனை செய்து வந்தது. அதனால், கடந்த ஆறு மாதங்களாக தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை அந்நாட்டு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றுவதை தொடர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தங்கராஜு என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து வரும் ஏப்ரல் 26ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதனை மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பலரும் எதிர்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hanged punishment again in Singapore


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->