இலங்கையில் இன்று முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடல்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்ட உள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கேஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் . 

இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. 

இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும், கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government offices and schools closed in Sri Lanka from today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->