சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதி? அரசு ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதி அளிப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது குறித்து அந்த நாட்டு அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அந்நாட்டு உணவு மற்றும் கால்நடை  தீவன துறையிடம் அரசு கருத்துக்களை கேட்டுள்ளது. அதன்படி இதற்கு அனுமதி அளித்தால் தேனீக்கள், வண்டுக்கள் என அனைத்து வகையான பூச்சிகளையும் சிங்கப்பூர் மக்கள் உணவாக உட்கொள்ள முடியும். மேலும் இந்த பூச்சிகளை நேரடியாகவோ அல்லது எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களாகவோ சாப்பிட முடியும் என கூறப்படுகிறது.

பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று சிங்கப்பூர் உணவு மற்றும் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government discussed allowed to eat insects in Singapore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->