உலகம் முழுவதும் பேரிடர் தடுப்புக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலும் செலவிடப்படுவதில்லை.! ஐநா அவை.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பேரிடர் தடுப்புக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலும் செலவிடப்படுவதில்லை ஐநா அவை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் நிகழும் இயற்கை பேரிடர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் இயற்கை பேரிடர்களை தடுப்பதற்கு ஒதுக்கப்படும் நிதியில் குறைவாகவே செலவிடுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆற்றல் மூலங்களை நோக்கி நகரும் அதே சமயத்தில் பேரிடர்களை தடுப்பதற்கும் மற்றும் எதிர்கொள்வதற்கான செலவினங்களை அதிகரிக்க விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் 2010 முதல் 2019ஆம் ஆண்டு காலம் வரையிலான ஒதுக்கப்பட்ட 133 மில்லியன் பேரிடர் நிதியில் 4% மட்டுமே பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செலவிடப்பட்டுள்ளது. மீதம் பேரிடர் மீட்புப் பணிகளுக்காக செலவிட்டது என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து உலக அளவில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் பல இயற்கை பேரிடர்களின் மத்தியில் வாழ்ந்து வருவதால், நாம் அவற்றை தடுப்பதில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பேரிடர் அமைப்பின் தலைவர் மாமி மிசுடோரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Funds allocated for disaster prevention are not widely used


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->