லண்டனில் உச்சத்தை தொட்ட வெப்பநிலையால் குடியிருப்புகளில் தீப்பிடிப்பு.! - Seithipunal
Seithipunal


லண்டனில் உச்சத்தை தொட்ட வெப்பநிலையால் குடியிருப்புகளில் தீப்பிடித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் நிலவும் அதிகபட்ச வெப்ப நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இங்கிலாந்து முழுவதும் மிகவும் அதிகபட்ச வெப்பநிலையால் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் லண்டனில் நிலவும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் கிழக்கு லண்டனில் வென்னிங்டன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெப்பம் தாங்காமல் தீ பற்றி எரிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வென்னிங்டன் பகுதிகளில் தீயை அணைக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வெப்பம் தாங்க முடியாமலும், அண்டை நகரத்திற்கு கூட செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire in London residential area due to peak heat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->