தென் கொரியாவில் நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை.! - Seithipunal
Seithipunal


உணவு மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தென் கொரியாவில் நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தென் கொரியாவின் வேளாண்மை, உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அரிசியின் விலை கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்ததை விட இந்த ஆண்டு 24.9 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தென் கொரியாவில் சமீப காலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேசமயம், உற்பத்திக்கான செலவினங்கள் உயர்ந்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள விவசாயிகள் செலவுகளை ஈடு செய்யவும், கடன்களை திருப்பி செலுத்தவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரிசி விலையை நிலைப்படுத்த அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு உற்பத்தியில் 20 சதவீதத்தை கொள்முதல் செய்ய முடிவு செய்தது. மேலும் வரும் அக்டோபர் 20-ந்தேதி முதல் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் டன் அரிசியை கையிருப்பில் வைக்க தென் கொரிய அரசு முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers are worried because the purchase price of rice in South Korea continues to fall


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->