இங்கிலாந்தில் இந்து- முஸ்லீம் வன்முறை.. எச்சரித்த போலீசார்.. நீடிக்கும் பதற்றம்.!    - Seithipunal
Seithipunal


துபாயில் கடந்த ஆகஸ்ட் 28-இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து கிழக்கு பகுதியில் லேசிஸ்டர் நகரில் வசிக்கின்ற முஸ்லிம் மற்றும் இந்துக்களுக்கு இடையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சச்சரவு ஏற்பட்டுள்ளது. 

இதை அடுத்து அப்பகுதிகளில் இன்றும் பதற்றமான நிலை இருக்கிறது. போலீசார் விரைந்து வந்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். மேலும், வன்முறை தொடராமல் இருக்க அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

சொகுசு வாகனம் ஓட்ட ஆசை.! யூ-டியூப் பார்த்து திருடிய இளைஞர்கள் கைது.! -  Seithipunal

இந்த காவல்துறை எச்சரிக்கையை தொடர்ந்து வன்முறை சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விசாரணையின் அடிப்படையில் இதுவரை இரண்டு பேர் கைதாகியுள்ளனர். 

இது குறித்து இங்கிலாந்து போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "அமைதியை சீர்குலைத்த நபர்களின் வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது என்றும், இதில் பலர் தலைமுறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகிறார்கள் என்றும் இதுபோல மீண்டும் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது அரசாங்க விதிமுறைகளையும் மீறி நடந்து கொண்டாலோ பொறுத்துக் கொள்ள மாட்டோம்." என்று கூறியுள்ளனர். 

இதுகுறித்து இங்கிலாந்து மக்கள் சிலர், "எங்கள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் பிரச்சனைகள் நடந்தால் இனியும் அமைதியாக இருக்க மாட்டோம்." என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england hindu muslim fight


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->