"நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" - தைவான் ஆதரவு நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

இதையடுத்து தைவான், அமெரிக்காவுடன் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டதால் தைவான் எல்லையில் சீனா தீவிர போர் பயிற்சி மேற்கொண்டது. இதை பொருட்படுத்தாமல் அமெரிக்காவை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் தைய்வானுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான லூதியானா மற்றும் ஜெர்மனி நடுநிலைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு தைவான் சென்றுள்ளது.

இது தொடர்பாக சீனாவின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர், தைவான், சீனா இடையேயான தேசிய இறையாண்மை மற்றும் மாகாண ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் சீனா தெளிவாக உள்ளது . தைவான் சுதந்திரத்திற்கான சதிகளை அடித்து நொறுக்குவதில் சீனா உறுதியுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவிற்கு தீங்கிழைக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont play with fire China warns Taiwan support nations


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->