முகநூல் கணக்கு முடக்கப்பட்டதால் வழக்கு தொடர்ந்த வாலிபர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


முகநூல் கணக்கு முடக்கப்பட்டதால் வழக்கு தொடர்ந்த வாலிபர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!

அமெரிக்கா நாட்டில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் முகநூல் கணக்கு கடந்த 2022-ம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. 

மேலும், கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை முகநூல் நிர்வாகம் அளித்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது முகநூல் விதிகளை மீறும் செயல் என்பதால் கணக்கு முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து ஜேசன் முடக்கப்பட்ட தனது முகநூல் கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர முகநூல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

ஆனால், அனைத்தும் தோல்வியடைந்ததனால் அதிர்ச்சியடைந்த ஜெசன், எந்தவித காரணமும் இன்றி தனது கணக்கை முடக்கிய முகநூல் மீது ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்ற நிலையில் ஜெசனின் கணக்கை முடக்கியதற்கான காரணத்தை முகநூல் நிறுவனத்தால் தெரிவிக்க முடியவில்லை.

இதை பதிவு செய்த நீதிமன்றம் எந்தவித காரணமும் இல்லாமல் பயனாளரின் முகநூல்கணக்கை முடக்கியதற்காக சம்பந்தப்பட்ட பயனாளருக்கு 50 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை தொடர்ந்து முடக்கப்பட்ட ஜெசனின் முகநூல் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், ஜெசனுக்கு 50 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த தொகையை முகநூல் நிறுவனம் இதுவரைக்கும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court fine to facebook company for us man face book account ban


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->