காலநிலை மாற்றம்.! எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஆய்வை தொடங்கிய சீன விஞ்ஞானிகள்..! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்டறியும் நோக்கம் மற்றும் நீர் சூழலியல் மற்றும் மனித செயல்பாடுகளினால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆய்வு மேற்கொள்வதற்காக எவரெஸ்ட் சிகரத்தின் மவுண்ட் கோமோலாங்மா பகுதியை நேற்று சீன விஞ்ஞானிகள் அடைந்தனர்.

சுமார் 8 மணி நேரம் பயணம் செய்து உச்சியை அடைந்த விஞ்ஞானிகள் அங்கு நிறுவப்பட்டுள்ள வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தப்படும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சூரிய வெளிச்சம் இல்லாமல் 45 நாட்கள் இயங்கும் பேட்டரிகளை சிகரத்தில் விஞ்ஞானிகள் நிறுவினர். மேலும் மற்றொரு குழுவினர் சிகரத்தில் ஏற்படும் மாசு அளவை கண்டறியும் வகையில் மாதிரிகளை சேகரித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் உலக வெப்பமயமாதல், எவரெஸ்ட் சிகரத்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், மேற்குக் காற்று மற்றும் பருவமழைகளின் தாக்கம், கிங்காய்-திபெத் பீடபூமியில் மனித உடலின் உடலியல் எதிர்வினைகள் ஆகியவை கண்டறியப்படவுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese scientists started research at the Mount Everest for climate change


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->