சீனாவில் 3 குழந்தைக்கு அனுமதி.. கார் டிசைனையே மாற்றிய வுலிங் மோட்டார்ஸ்..! - Seithipunal
Seithipunal


கடந்த 40 வருடங்களாக சீனாவில் வீட்டுக்கு ஒரு குழந்தை திட்டமானது அமலில் இருந்தது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், பிறப்பு விகிதத்தின் குறைவால் எதிர்கால பிரச்சனையை சீனா சந்திக்க தொடங்கியது.

சீனாவில் வயதானவர்கள் அதிகமாகி, உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் பெருமளவிலான ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட நிலையில், கடந்த 2014 ஆம் வருடம் இந்த விதிகள் தளர்த்தப்பட்டு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. 

குழந்தை பெற்றுக் கொண்டால் அதிக செலவு ஏற்படும் என்ற கண்ணோட்டத்தில் பலரும் அதனை தவிர்த்து வந்த நிலையில், அதிகளவில் பிறக்கும் குழந்தைகள் கழிப்பறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட கதையெல்லாம் நாம் அறிவோம். இந்நிலையில், தற்போது குழந்தை பிறப்பு கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா, இனி மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீன வாகன உற்பத்தியாளர் வுலிங் (Wuling ) நாட்டின் மூன்று குழந்தைகளின் கொள்கை அறிவிக்கப்பட்ட பின்னர் 9 இருக்கைகள் கொண்ட வாகனத்தை தயாரிப்பதாக புதன்கிழமை உறுதி அளித்தார். மேலும், வாகனத்தின் அமைப்பு குறித்து புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த புகைப்படத்தில் "2 + 2 + 2 + 3" என்ற அமைப்பில் காரில் இருக்கைகள் வடிவமைக்கப்படலாம் என திட்டமிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Wuling Company Announce 9 person Travel Vehicle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->