2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து: 515 பேர் படுகாயம்! 202 பேருக்கு எலும்பு முறிவு! - Seithipunal
Seithipunal


சீனா, பெய்ஜிங்கில் 2 சுரங்கப்பாதை ரயில்கள் நேற்று மோதிக்கொண்டதில் 515 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 202 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்திற்கு கடுமையான பனி காரணமாக ரயில் தண்டவாளங்கள் வலுக்குவதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வலுக்கும் தண்டவாளங்களில் சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் துண்டிக்கப்பட்டதால் பின்னால் வந்து கொண்டிருந்த ரயில் தடங்களில் நிற்க முடியாமல் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவ பணியாளர்கள், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். 

கடந்த புதன் கிழமையில் இருந்து பெய்து வரும் கடுமையான பனியினால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் கடுமையான பனி காரணமாக 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China 2 trains collided accident 515 people injured 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->